மூடு

பொதுவிநியோகத் திட்டத்தில் ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

செ.வெ.எண்:-06/2024

நாள்:-03.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

பொதுவிநியோகத் திட்டத்தில் ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நேர்வில், ஜுன்-2024-ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.