மூடு

மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 27.12.2024 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2024

செ.வெ.எண்:-64/2024

நாள்:-25.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 27.12.2024 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் (24 இரண்டு சக்கரம், 2 மூன்று சக்கரம் மற்றும் 2 நான்கு சக்கரம்) 27.12.2024-ம் தேதியன்று காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது ஏலத்தில் கலந்துகொண்டு வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஏல முன்பணத்தொகையாக ரூ. 1,000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதி சீட்டு 26.12.2024-ம் தேதியன்று மாலை 17.00 மணி வரை திண்டுக்கல் ரவுண்ரோடு, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் விநியோகிக்கப்படும்.

ஏலத்தில் கலந்துகொண்டு வாகனத்தை ஏலத்தில் பெறும் நபர்கள் ஏலத்தொகை முழுவதையும் 18 சதவீதம் ஜிஎஸ்டி உட்பட முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு கைப்பேசி எண்கள்(9787814425 மற்றும் 9751123567) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.