மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., இன மாணவ, மாணவிகள் 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-13/2024
நாள்:-09.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., இன மாணவ, மாணவிகள் 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி(IIT, IIM, IIIT, NIT) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., வகுப்பை (BC, MBC/DNC) சார்ந்த, மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகைக்கு, 2024-25 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவிகள், ”ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை – 05. தொலைபேசி எண். 044 -29515942, மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com” என்ற முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை -5 / மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை -5 அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியில் இருந்தோ விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், 2024-25 ஆம் நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரைப் செய்து, ”ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை – 05. தொலைபேசி எண். 044 -29515942, மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com” என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2024 –க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025 –க்குள் அனுப்பி வைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.