மூடு

மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 08/08/2024

செ.வெ.எண்:-12/2024

நாள்:-06.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மலையிடப் பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண் 66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்:30.03.2020-ல் வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண் 132, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்:18.07.2024-ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

எனவே, இதுவரை மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.