மூடு

மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றலை உறுதி செய்வதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 13/09/2024
.

செ.வெ.எண்:-23/2024

நாள்:-09.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றலை உறுதி செய்வதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப்படி” முகாம் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல் தலைமையில் இன்று(09.09.2024) நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற உயர் கல்வியில் சேராதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்காக “உயர்வுக்குப்படி” என்ற நிகழ்ச்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் கோட்டத்தில் 09.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய நாட்களிலும், கொடைக்கானல் கோட்டத்தில் 12.09.2024 மற்றும் 21.09.2.024 ஆகிய நாட்களிலும், பழனி கோட்டத்தில் 26.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய நாட்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் கோட்டத்தில் “உயர்வுக்குப்படி” முகாம் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியில் இன்று(09.09.2024) நடைபெற்றது. முகாமில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு கல்லூரி நிர்வாகத்தினர்கள், மாவட்டத் திறன் மேம்பாட்டுக்கழகம், சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டு, உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

பல்வேறு கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் சார்பாக 29 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரங்குகளில் இருந்த கல்லூரி நிர்வாகத்தினர் மூலம் சேர்க்கைக்கான வழிமுறைகள் விளக்கிக்கூறப்பட்டன. இம்முகாமில் 297 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஜிடிஎன் கல்லூரி நிர்வாகம் சார்பில் 6 மாணவர்களுக்கும், ஸ்ரீவி கல்லூரி நிர்வாகம் சார்பில் 3 மாணவர்களுக்கும் உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, துணைஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரி சுவி, முதன்மைக்கல்வி அலுவலர் திரு.இரா.புண்ணியகோடி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், ஜிடிஎன் கல்விக்குழும தாளாளர் திரு.லயன் கே.ரெத்தினம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.