மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புலியூர்நத்தம், ஜோகிப்பட்டி மற்றும் புளியமரத்துக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.8.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024
.

செ.வெ.எண்:- 22/2024

நாள்: 12.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புலியூர்நத்தம், ஜோகிப்பட்டி மற்றும் புளியமரத்துக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.8.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புலியூர்நத்தம், ஜோகிப்பட்டி மற்றும் புளியமரத்துக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(12.11.2024) திறந்து வைத்து, ரூ.8.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 42 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 700 நெல் அரவை ஆலைகளில் கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்டு, கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்காக 3 இலட்சம் மெ.டன் நெல்லை சேமித்து வைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செமிகுடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், நமக்குநாமே திட்டத்தின் கீழ், புலியூர்நத்தம் ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், புளியமரத்துக்கோட்டை ஊராட்சி, கோடாங்கிபட்டியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில், புலியூர்நத்தம் ஊராட்சியில் முத்துநாயக்கன்பட்டி முதல் சுக்காம்பட்டி வரை தலையாறு ஆற்றின் குறுக்கே ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், ஜோகிப்பட்டி ஊராட்சி, சோளியக்கவுண்டனுாரில் தலையாறு ஆற்றின் குறுக்கே ஜவ்வாதுப்பட்டி முதல் கேதையறும்பு – இடையக்கோட்டை சாலையில் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் கோடங்கிபட்டி – நவலுாத்து சாலையில் கருமலை வாய்க்காலின் குறுக்கே ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் புளியமரத்துக்கோட்டை ஊராட்சி, மல்லிகாபுரத்தில் ரூ.37.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜோகிப்பட்டி ஊராட்சியில் பாலமரத்துப்பிரிவில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, புளியமரத்துக்கோட்டை ஊராட்சி, நாகப்பனுாரில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, என மொத்தம் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(12.11.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் புலியூர்நத்தம் ஊராட்சியில் ஆர்.புதுார் – பிஎன் கல்லுப்பட்டி வரை சாலை ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், ஜோகிப்பட்டி ஊராட்சியில் கேதையறம்பு – இடையகோட்டை சாலையிலிருந்து புள்ளாக்கவுண்டனுார் வரை சாலை ரூ.1.74 கோடி மதிப்பீட்டிலும், புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் புலங்கட்டிநாயக்கனுார் சாலையிலிருந்து கருமலை கன்னிமார் கோவில் சாலை 2.45 கோடி மதிப்பீட்டிலும், ஆசாரிபுதுார் – மல்லிகாபுரம் வரை சாலை ரூ.2.59 கோடி மதிப்பீட்டிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் நியாயவிலைக்கடை கட்டடம் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டிலும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் புளியமரத்துக்கோட்டை ஊராட்சியில் மல்லிகாபுரத்தில் கலையரங்கம் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ.8.20 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.சகுந்தலா பாலச்சந்திரன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி பூரணம், திரு.ஜோதீஸ்வரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.