மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செ.வெ.எண்:-93/2025
நாள்: 24.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இன்று(24.09.2025)அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.69.62 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டும் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
அதனை தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர், திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.