மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வெரியப்பூர் ஊராட்சி மூனூர் கிராமத்தில் ரூ.09.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடை கட்டிடத்தை பொத

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
.

செ.வெ.எண்:-27/2025

நாள்:-12.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வெரியப்பூர் ஊராட்சி மூனூர் கிராமத்தில் ரூ.09.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வெரியப்பூர் ஊராட்சி மூனூர் கிராமத்தில் ரூ.09.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பெற்ற பின்பு தமிழ்நாட்டில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் கடந்த 53 மாதத்தில் திறக்கப்பட்டியிருக்கிறது. இதுவரை 21 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்மென்று நெல்லை வாங்கி உடனடியாக அறவைக்கு அனுப்பி நெல்லை அறைத்து மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை சில்வர் பாத்திரத்தில் வைப்பதற்கும், நியாயவிலைக்கடையின் முன்பகுதியில் நிழல் கூடை அமைப்பதற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 300 முழுநேரக்கடைகள் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 105 நியாயவிலைக்கடைகள் பிரித்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கபட்ட நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேரக்கடைகளும், 473 பகுதி நேரக்கடைகளும் இயங்கி வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் 140 முழுநேரக்கடைகளும், 119 பகுதி நேரக்கடைகளும் செல்பட்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் அனைத்து பகுதி நேரக்கடைகளுக்கும் விற்பனை முனைய இயந்திரம் (POS) வழங்கப்படவுள்ளது.

குடும்ப அட்டை நகல் வேண்டி இணைய தளத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு வீடு தேடி குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளார்கள். v

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 90,480 பயனாளிகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 13,540 பயனாளிகளும் தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்கள். கடந்த 4 வருடங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் 66,991 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 6216 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடவுன் கட்டப்பட்டு வாங்கப்படும் நெல்லை சேமிக்கப்பட்டு, 700 அரிசி ஆலைகளில் அறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 முதல் ரூ.1000 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின்கீழ் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை 250 ஆகிய 730 மருத்துவமனைகளில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சேர்க்கப்பட்டால் 48 மணி நேரம் சிகிச்சைக்கு மேற்கொள்ள செலவாகும் தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

வெரியப்பூர் ஊராட்சியில் ரூ.18.25 கோடி மதிப்பீட்டில் 115 திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 16 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் 7 புதிய தார்சாலை திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெரியப்பூர் ஊராட்சிக்கு விரைவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டித்தரப்படும்.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.