மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
செ.வெ.எண்:-23/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
ரூ.9.03 கோடி மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரூ.9.03 கோடி மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர் ஊராட்சி நவாமரத்துப்பட்டி மெயின்ரோடு முதல் ராமசாமி வீடு வரை ரூ.5.54 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மாரியம்மாள் வீடு முதல் மனோகரன் வீடு வரை ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, காளிப்பாளையம் மெயின் ரோடு முதல் முத்துச்சாமி வீடு வரை ரூ.8.31 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சந்தரிபாளையம் கிராமத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் மின் மோட்டார் மற்றும் புதிய பைப்லைன் அமைக்கும் பணி ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வெரியப்பூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி, நாகப்பன்பட்டி மாரியம்மாள் வீடு முதல் மனோகரன் வீடு வரை ரூ.4.76 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வெரியப்பூர் ஊராட்சியில் குடிநீர் வடிகாகல் வாரியத்தின் மூலம் ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டில் 9 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து டெலிவரி பைப் லைன் அமைக்கும் பணி, வெரியப்பூர் நீலமேகம் வீடு அருகில் ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி,பூபதி வீடு முதல் தண்டபாணி வீடு வரை ரூ.2.74 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, பூபதி வீடு முதல் செல்லமுத்து வீடு வரை ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி, வெரியப்பூர் ஊராட்சியில் ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணிகள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெரியப்பூர் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகள் வெரியப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து, புலியூர்நத்தம் ஊராட்சியில் தொற்கு பகுதியில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பைப் லைன் வயர்கள் பொருத்தும் பணி, பி.என்.கல்லுப்பட்டி கிராமத்தில் ரூ.3.22 இலட்சம் மதிப்பீட்டில் கலையரசி வீடு முதல் நாகப்பன் வீடு வரை வண்ணக்கல் பதிக்கும் பணி, பெரியகுளிப்பட்டி கருணாநிதி வீடு முதல் ஆலமரம் வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சின்னகுளிப்பட்டி ஜெயராம் வீடு முதல் சமுதாயக்கூடம் வரை ரூ.3.72 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கம் பணி, சின்னத்தேவர் வீடு அருகில் ரூ.3.40 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வீரன் வீடு அருகில் ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி, சின்னகுழிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.3.40 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி, முத்துநாயக்கன்பட்டி தார்ச்சாலை முதல் முருகன் வீடு வரை ரூ.3.99 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, பெரிய குளிப்பட்டி மண்கண்டன் வீடு முதல் தார்சாலை வரை ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியகுளிப்பட்டி தார்சாலை முதல் சஞ்சீவி வீடு வரை ரூ.4.89 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியகுளிப்பட்டி தார்சாலை முதல் சஞ்சீவி வீடுவரை ரூ.7.76 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது மேலும், ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புலியூர்நத்தம் சமுதாயக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்து.
மார்க்கம்பட்டி ஊராட்சியில் முஸ்லீம் தெரு மேல்நிலைத்தொட்டி முதல் பள்ளி வாசல் சரீப் வீடு வரை ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, புதிய மேல்நிலைத்தொட்டி முதல் தெற்கு தெரு வரை ரூ.0.60 இலட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, இராயக்காவலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகூடம் முதல் ஓடை வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, பத்திரகாரர் வீடு முதல் மாணிக்கம் வீடு வரை ரூ.4.15 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கணவாய்பட்டி கிராமத்தில் குப்புச்சாமி வீடு முதல் ஆத்திக்காடுட்டுபுதூர் வரை செல்லும் தார்சாலை வரை ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மாம்பாறை மெயின் ரோடு முதல் சாவடி வீதி வரை ரூ.4.86 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கணவாய்பட்டி தார்சாலை பிரிவு முதல் மங்கம்மாள் சாலை கண்ணன் தோட்டம் வரை ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, அரிக்காரர் வீடு முதல் ரஹீம் வீடு வரை ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது மற்றும் மார்க்கம்பட்டியில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜவ்வாதுபட்டி ஊராட்சியில் அழகியகவுண்டன் புதூரில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம், பருமரத்துப்பட்டி கிழக்குத் தெருவில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ.9.29 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஜவ்வாதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை, ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை, ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், கிழக்கு தெருவில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடக்குக் தெருவில் புதிய சமுதாயக்கூடம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவ்வாதுப்பட்டி கிராம சாவடி முதல் காளியம்மன் கோவில் வரை ரூ.4.89 இலட்சம் மதிப்பீட்டில் மூடியுடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் பருமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு வண்ணக்கல் பதிக்கும் பணி, தண்டபாணி வீடு முதல் தருமன் வீடு வரை ரூ.2.01 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, மெயின் சாலை முதல் அஜ்மல் அலி வீடு வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் தாஜ்நிஷா வீடு வரை சிமெண்ட் கல் பதிக்கும் பணி ஆகிய பணிகள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் ரூ.47.47 இலட்சம் சின்னக்காம்பட்டி சாலையில் இருந்து கோமாளிபட்டி மேற்கு சாலை மேம்பாட்டு பணி, இடையகோட்டை சாலையில் இருந்து நாரணப்பநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை ரூ.36.64 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பட்டு பணி, கோமாளிபட்டி சாலையிலிருந்து தாழையூத்து – இடையகோட்டை சாலை ரூ.35.59 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி, வெரியப்பூர் – மார்க்கம்பட்டி சாலையிலிருந்து சின்னக்காம்பட்டி புதூர் வழியாக கள்ளிமந்தையம் இடையகோட்டை சாலை ரூ.52.34 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள், கோமாளிபட்டி மேற்கு சாலையிலிருந்து சங்கக்கல் பேருந்து நிறுத்தம் – இடையகோட்டை சாலை ரூ.27.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள், இராகவநாயக்கன்பட்டி சாலை முதல் சாத்தாரப்பன் கோவில் வரையிலான சாலை ரூ.31.35இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி, ராகவநாயக்கன்பட்டி முதல் மேற்கு குளம் வழியாக கருப்பணசாமி கோவில் வரை ரூ.53.63 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணி, சின்னக்காம்பட்டி- மார்க்கம்பட்டி சாலையில் இருந்து ஊசிப்புல் தோட்டம் வரை ரூ.41.65 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, நாரயப்பநாயக்கன்பட்டி சாலை முதல் மணி தோட்டம் வரை ரூ.42.35 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்பாட்டு பணி, கிருஷ்ணசாமி தோட்டம் முதல் மேற்கு குளம் வரை ரூ.42.80 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு சுமார் 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுள்ளார்கள். குறிப்பாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களின் மூலமாக ஆண்டு 12 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.
அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
தொடர்ந்து, சின்னக்காம்பட்டி ஊராட்சியில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) திரு.கார்த்திக்கேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.