மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் – அடிக்கல் நாட்டி மற்றும் நிறைவு செய்யப்பட்ட திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026

செ.வெ.எண்:-05/2026

நாள்:-02.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.5.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மற்றும் தானியங்கி நகரும் படிக்கட்டுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.5.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (02.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  .

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விலை கிடைக்காத நேரத்தில் சேமித்து வைக்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரத்தில் குளிர் சாதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மூலமாக ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கேதையறும்பில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. முருங்கை உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணமாக முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒட்டன்சத்திரம் தொகுதியில் மார்க்கம்பட்டியில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலைமச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13.02.2026-அன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், புஷ்பத்தூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.455.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் வீடுகளையும், கரியாம்பட்டி ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (நவீன வங்கி) கட்டடத்தையும் என மொத்தம் ரூ.5.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் சுகாதார வளாகம் முதல் சுடுகாடு வரை (0.680 கி.மீ) முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.23.32 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, இராஜாம்பட்டி ஊராட்சி உட்கடை பழனிக்கவுண்டன்புதூர் தார் ரோடு முதல் ஈஸ்வரி வீடு வரை (40 மீ) 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.2.36 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழனிக்கவுண்டன்புதூர் செல்வி வீடு முதல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை (60 மீ) 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.5.24 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சி உட்கடை சங்கம்பாளையம் தார்ரோடு முதல் சின்னு வீடு வரை (40 மீ) 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.2.36 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராஜாம்பட்டி நடராஜ் வீடு முதல் வடிவேல் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி (கிராம ஊராட்சிகள்) திட்டத்தின் கீழ், ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் வீடு முதல் தனா வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி (கிராம ஊராட்சிகள்) திட்டத்தின் கீழ், ரூ.2.46 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழனிக்கவுண்டன்புதூர் செல்லமுத்து வீடு முதல் சிவக்குமார் வீடு வரை சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.6.20 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட்
சாலை அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழனிக்கவுண்டன்புதூர் குமாரசாமி வீடு முதல் கருப்பாத்தாள் வீடு வரை சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.84 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொக்கரகால்வலசு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கனிம நிதி திட்டத்தின் கீழ், ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வக கட்டடம் அமைக்கும்
பணி, இராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அத்திவலசு கிராமத்தில் மாவட்ட கனிம நிதி திட்டத்தின் கீழ், ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி,

மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வன்னியர்வலசு சாலை ரவிச்சந்திரன் தோட்டம் அருகிலிருந்து பாலு மில் வரை (1.100 கி.மீ) நபார்டு திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.34.86 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வன்னியர்வலசு சாலை மெட்ராஜ்காரர் தோட்டம் அருகிலிருந்து சிவச்சந்திரன்
தோட்டம் வரை (1.100 கி.மீ) முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.39.05 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி,
மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் சுகாதார வளாகம் முதல் சுடுகாடு வரை (0.680 கி.மீ) முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.23.32 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.3.45 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்கும் பணி, மிடாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முதல் அங்கன்வாடி வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி (கிராம ஊராட்சிகள்) திட்டத்தின் கீழ், ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, மிடாப்பாடி ஊராட்சியில் வடக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து செல்வராஜ் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி (கிராம ஊராட்சிகள்) திட்டத்தின் கீழ், ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட விஷ்ணுவர்தன் நகர் முதல் அமராவதி ஆறு வரை (0.500 கி.மீ) முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.14.03 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் அண்ணாநகர் மேற்குவீதி திருமாத்தாள் வீடு முதல் சக்திவேல் வீடு வரை 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.9.84 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் அண்ணாநகர் செந்தில் வீடு முதல் கடத்தூர் ரோடு வரை 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜிவிஜி நகர் ரயில்வே கேட் முதல் சுப்பையன் கடை –மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜிவிஜி நகர் மெயின் ரோட்டில் இருந்து ஆர்.பி.எம்.நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பசுபதிபுதூர் அமராவதி ஆறு மாமரம் அருகில் உள்ள குடிநீர் கிணற்றிற்கு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025 – 2026)-ன்கீழ், ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மோட்டார் அறைக் கட்டடம் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பசுபதிபுதூர் அமராவதி ஆறு மாமரம் மோட்டார் ரூம் முதல் விநாயகர் கோவில் வரை 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் (2025 – 2026)-ன்கீழ், ரூ.7.28 இலட்சம் மதிப்பீட்டில் 3” பி.வி.சி பைப்லைன் அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் மாயவன் கோவில் பின்புறம் 14-வது நிதிக்குழு மானியம் சேமிப்பு நிதி திட்டம் (2025–2026)-ன்கீழ், ரூ.20.40 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (60,000 லிட்டர் கொள்ளளவு) அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரவி வீடு முதல் ஜீவா அறிவழகன் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.1.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் ஆரோக்கிய சாமி வீடு முதல் பொன்னாத்தாள் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.1.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் ஆறுமுகம் வீடு முதல் லட்சுமி வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.1.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட முத்துச்சாமி வீடு முதல் முருகானந்தம் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.1.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அரவிந்தன் வீடு முதல் குழந்தைவேல் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.1.48 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தமிழரசி வீடு முதல் கண்ணம்மாள் வீடு வரை ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் நிதி (கிராம ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டியக்கவுண்டன் புதூர் கண்டிமுத்து தோட்டம் முதல் பிரிக்கால் தோட்டம் வரை சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் முத்துச்சாமி வீடு முதல் செல்வராஜ் வீடு வரை சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.0.90 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பசுபதிபுதூரில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (30,000 லிட்டர் கொள்ளளவு) அமைக்கும் பணி, புஷ்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.பி நகரில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (60,000 லிட்டர் கொள்ளளவு) அமைக்கும் பணி, கரியாம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கனிம நிதி திட்டத்தின் கீழ், ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.4.63 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (சி.ஆர்.ஐடி.பி) 2024-2025-ன் மூலம் பழநி (நெ), க(ம)ப, கோட்டம் மற்றும் ஒட்டன்சத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநிலச் சாலையான (SHU 108) திண்டுக்கல் – கோயமுத்தூர் திம்மம் – பெங்களூர் சாலை (கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை NH – 209) ஒட்டன்சத்திரம் நகர்ப்பகுதி கி.மீ. 26/4-ல் நடைமேம்பாலம் அமைத்தல் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் நடைமேம்பாலம், படிகட்டுகள், தானியங்கி நகரும் படிகட்டுகள் (Escalators) மற்றும் மின் தூக்கிகள் (Lifts) மின் பராமரிப்பு அறைகளுடன் அமைக்க அரசாணை பெறப்பட்டு கடந்த 04.06.2025-அன்று ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, பணிகள் நிறைவுபெற்றுள்ள நடைமேம்பாலத்தின் முக்கிய பகுதிகளான படிக்கட்டுகள் மற்றும் தானியங்கி நகரும் படிக்கட்டுகளை (Escalators) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி வட்டாட்சியர் திரு.நவநீதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பழனி சரகம்) திரு.செந்தில்வேல் பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.தாஹிரா, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புதுறை பழனி கோட்டப்பொறியாளர் திரு.சி.விஜயகுமார், ஒட்டன்சத்திரம் உதவி கோட்டப்பொறியாளர் திரு.ஆர்.டி.ஜெயக்குமார், ஒட்டன்சத்திரம் உதவிப்பொறியாளர் திரு.ஆர்.இளவரசன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.