மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/07/2024
.

செ.வெ.எண்:-66/2024

நாள்:-24.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியில் இன்று(24.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டியிருக்கிறார். அந்த வகையில் “மக்களுடன் முதல்வர்“ சிறப்பு முகாம் ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்றது. முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தருமபுரியில் தொடங்கி வைத்தார்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர்(முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்.

இந்த முகாமில் உடனடியாக தீர்வு காணப்படும் கோரிக்கைகளுக்கு முகாமிலேயே தீர்வு வழங்கப்படும். மற்ற மனுக்கள் மீது முறையான பரிசீலனை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், 22 பயனாளிகளுக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான அனுமதி ஆணை, 17 பயனாளிகளுக்கு உழவர் அட்டை, 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, ஒரு பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை ஆகியவற்றை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சசிக்குமார், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.