மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்
செ.வெ.எண்:-62/2025
நாள்: 16.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் இன்று (16.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள்.
பொதுமக்களுக்கு அன்றாட தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசின் திட்டங்களை பெற கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, புதிய மின் இணைப்பு, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் இம்முகாமில் மனு அளித்தால் அவர்களுக்கு தீர்வு காணப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இம்முகாமில் பெறப்படும் மனுக்களின் விபரங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
ஏற்கனவே முதியோர் உதவித்தொகை பெறாமல் இருப்பவர்களும் தற்போது 60 வயதை தாண்டியவர்களும் முதியோர் உதவித்தொகை பெற இம்முகாமில் மனு கொடுத்தால் மனுவின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, வீடு இல்லாதவர்கள் இம்முகாமில் மனுக்கள் வழங்கி இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தருவதற்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகாதாரத்துறையின் சார்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், உயர் சிகிச்சை தேவைப்படுவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனு கொடுத்தால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ரூ.30.00 இலட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 4 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ஈஸ்வரி, அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி ரேகா அய்யப்பன், துணைத்தலைவர் திரு.ஆர்.ஜீவானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.