மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் திறந்து வைத்தார். (ரெட்டியார்ச்சத்திரம்)

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
.

செ.வெ.எண்: 76/2026

நாள்: 27.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலசைமச்சர் அவர்கள் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகளை இன்று(27.01.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்இ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் கூட்டுறவுத்துறையில் அமைச்சராக இருந்த போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு கல்லூரி கட்டுவதற்கு அனுமதி பெற்று கல்லூரி கட்டப்பட்டு, தற்போது மாணவ, மாணவியர்கள் அக்கல்லூரியில் பயில உள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்று தற்போது வரை 7 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார்கள். மாணவ, மாணவிகள் சேர்க்கை என்பது ஆத்தூர் முதலிடத்தில் உள்ளது.

இக்கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக படித்துக்கொண்டியிருக்கிறார்கள். ஆத்தூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் படித்துகொண்டியிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

.

மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ரெட்டியார்சத்திரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின்கீழ் ஒரு கல்லூரி கட்டவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அக்கோரிக்கையை உடனடியாக ஏற்று அனுமதி வழங்கி, அக்கல்லூரி கட்டுவதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். முதன்முதலாக தென்மாவட்டங்களில் மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்தது நமது ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு என்பதை குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அக்கல்லூரியும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அடியணூத்து பகுதியில் 2010-ல் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆத்தூர் தொகுதியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதியில் இயங்கும் கல்லூயில் இரண்டு கல்லூரியில் அதிக மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு விருப்புகின்றார்கள். இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வி மட்டும் இல்லாமல் பிற கலைகளிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனார்கள். மேலும், இக்கல்லூரிகளுக்கு அரங்குகள், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அரசு துறை வேலைக்கு செல்லும் வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்படும். இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளம் அறிவியல் வேதியியல்(ஆங்கிலம்), இளங்கலை வணிகவியல் (ஆங்கில வழி), இளங்கலை வணிக நிர்வாகவியல் (ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நல்ல ஒழுக்கத்துடன். அதிக எண்ணிக்கையிலும் கல்வி பயின்று வருகின்றார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஏதுவாக உள்ளது.

இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச.ரா.ஜெயப் பிரதா(பொ), நிதியாளர் திருமதி.இ.ஆர்.பி.சுகன்யா, உதவிப் பேராசியரியர் முனைவர் மு.சரவணன்(வணிகவியல் துறை), வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.