மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் ஆகியோர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025
.

செ.வெ.எண்:-91/2025

நாள்:-24.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் ஆகியோர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.06.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள், சத்துணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகியவற்றின் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் “குழந்தைகள் மேம்பாட்டு கண்காணிப்பு“புதிய செயலியை அறிமுகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இயக்குநர் திருமதி ஐ.எஸ்.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் திரு. ஜானிடாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் அமைப்பு சார்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பணிபுரியும் பெண்கள், நிறுவனங்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த கருத்தங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திண்டுக்கல்லில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மற்றும் புகார் எண்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதேபோல் அன்புக்கரங்கள் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய், தந்தை இல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை கல்லுாரி வரை படிக்க வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2.80 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் தொடர்பாக தகவல் சேகரித்து உறுதிப்படுத்துவதற்காக களஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11,000 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் சேகரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும், குழந்தைகள் குறித்த தகவல்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் குறித்து பதிவு செய்து, தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இன்றையதினம் “குழந்தைகள் மேம்பாட்டு கண்காணிப்பு“ புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும், பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்படுகிறது, என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் ஆகியோர் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத்தொகை இரசீது 1057 பயனாளிகளுக்கும், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரண்ங்கள் மற்றும் வண்ணச்சீருடைகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) திருமதி பெ.விஜயராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.