மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் ச
செ.வெ.எண்:-64/2025
நாள்:-14.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026 தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருடந்தோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,375/- என்ற மதிப்பீட்டிலும், ஒரு மாணவியருக்கு ஒரு மாணவனுக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,250/- என்ற மதிப்பீட்டிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு 7,725 மாணவர்களுக்கும், 7,361 மாணவிர்களுக்கும் என 15,086 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.67/- கோடி மதிப்பீட்டிலும், 2022-2023-ஆம் ஆண்டு 3,275 மாணவர்களுக்கும், 6,054 மாணவியர்களுக்கும் என 9,329 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.48/- கோடி மதிப்பீட்டிலும், 2023-2024-ஆம் ஆண்டு 6,028 மாணவர்களுக்கும், 6,757 மாணவியர்களுக்கும் என 12,785 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.17/- கோடி மதிப்பீட்டிலும், 2024-2025-ஆம் ஆண்டு 8,237 மாணவர்களுக்கும், 9,393 மாணவியர்களுக்கும் என 17,630 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8.50/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 54,830 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.26.82/- கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-2025) 7,604 மாணவர்களுக்கும், 9,322 மாணவியர்களுக்கும் என மொத்தம் 16,936 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.28/- கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றை தினம் முதல் கட்டமாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 35 மாணவர்களுக்கு ரூ.1,53,125/- மதிப்பீட்டிலும் மற்றும் 27 மாணவியர்களுக்கு ரூ.1,14,750/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 62 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,67,875/- மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆத்தூர், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டையில் உள்ள பள்ளிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பது பெருமையாக உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, வெகுதொலைவிலிருந்து பள்ளிக்கு வரும் கிராமப்புற மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் ”புதுமைப்பெண்” மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
மேலும், ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவியர்கள் உயல்கல்வி கற்பதற்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவுக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கல்லூரியில் 1400 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆத்தூர், ரெட்டியார்சத்திரத்தில் 2 கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்கல்லூரிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.2000 கோடி நிதியொதுக்கீடு பெறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 900 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகள் நேய கட்டடங்கள் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு விளையாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி அடையச் செய்வது இளைய தலைமுறையினராகிய உங்கள் கையில்தான் உள்ளது. அதனை அறிந்து மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். நாம் சேர்க்கும் செல்வம் என்பது நம்மோடு இல்லாது போய்விடும், ஆனால் நாம் கற்கும் கல்வியானது வாழ்நாள் முழுவதும் நமக்கு பயனளிக்கும் என்பதை மாணவ செல்வங்களாகிய நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தின விழாவினை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இத்தருணத்தில் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6800 நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடி மதிப்பீட்டில் புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கும் விழா, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, சித்தையன்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று(14.11.2025) துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 482 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், 122 நகரும் நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், 119 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 77 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், 8 நகரும் நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. இதில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில், 12 முழுநேர நியாயவிலைக் கடைகள், 27 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 5 நகரும் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 44 நியாய விலைக்கடைகள் பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே குடிமைப் பொருட்கள் பெறும் வகையில் புதிதாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், தற்பொழுது 223 நியாயவிலைக் கடைகளுக்கு நவீனப்படுத்தப்பட்ட கைரேகை கருவியுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. முன்னர் 785 நியாய விலைக் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 நியாயவிலைக் கடைகளுக்கு நவீனப்படுத்தப்பட்ட கைரேகை கருவியுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட உள்ளது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
முன்னதாக இன்றைய தினம்(14.11.2025) நடைபெற்ற விழாவில் ஆத்தூர் வட்டம், அய்யங்கோட்டை புதூர், ரெங்கராஜபுரம் காலனி, குரும்பட்டி, போடிக்காமன்வாடி, அண்ணாமலையார் மில்ஸ் காலனி ஆகிய 5 நியாயவிலைக் கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.ப.உக்ஷா, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் திருமதி பொதும்பொன்னு முரளி, துணைத் தலைவர் திரு.ஜாகீர் உசேன், சித்தையன்கோட்டை செயல் அலுவலர் திருமதி ஜெயமாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.