மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று(20.09.2025) திறந்து வைத்தார்
செ.வெ.எண்:-82/2025
நாள்:-20.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று(20.09.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 6 கூடுதல் வகுப்பறைகள், ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று(20.09.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 6 கூடுதல் வகுப்பறைகள், ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியப்பட்டி ஊராட்சி, வளையபட்டியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உங்கள் மனுவினை முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் ரூ.30 இலட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான தொகை அரசு வழங்கும்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று(20.09.2025) திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.141.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் மற்றும் குடிநீர் வசதி கட்டடங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் 233 ச.மீ தரை தளம் மற்றும் 233 ச.மீ முதல் தளம் என மொத்தம் 466 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
செட்டிப்பட்டி பள்ளி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்துவதற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையை நான் சென்னையில் இருக்கும் போது, அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களிம் கூறினேன். என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவர்கள் அரசானை வெளியிட்டர். ஒரே நாளில் இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கல்லுப்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வளையபட்டி, செட்டியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி தரத்தினை மேம்படுத்துவதற்கு இப்பள்ளி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
குழந்தை செல்வங்கள் படிப்பதற்கு தேவையான சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படும், மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும். இப்பள்ளிக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்குத் தேவையான கல்வி, குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தயாராக உள்ளது. இது உங்களுடைய அரசு, மக்களின் அரசு என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியப்பட்டி ஊராட்சி, வளையபட்டியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், துணை பதிவாளர் பொது விநியோக திட்டம் திருமதி உஷா நந்தினி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முருகன், வட்டார கல்வி அலுவலர் திரு.என்.நாகேந்திரன், உதவி செயற்பொறியாளர் திரு.மா.பிரதாப், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.