மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான “புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன்
செ.வெ.எண்:-104/2025
நாள்:-25.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான “புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை இன்று(25.09.2025) காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான “புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை இன்று(25.09.2025) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பங்கேற்றார்கள்.
மேலும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி, செல்லம்பட்டி கிளாடின் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு கல்லூரி மாணவியர்களுடன் உரையாற்றினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இதில் 45 கல்லூரிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான “புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை இன்று(25.09.2025) காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளுக்காக புதுமைப்பெண் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ”புதுமைப்பெண்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மொத்தம் 13,245 மாணவ, மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும், 2025-2026-ஆம் ஆண்டில் முதலமாண்டு கல்லூரியில் படிக்கும் 6,902 மாணவ, மாணவிகள் இன்று முதல் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன்பெறவுள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.