மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பழனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய் வார்டு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
.

செ.வெ.எண்:-05/2025

நாள்:-06.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பழனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய் வார்டு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப்பிரிவு கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பழனி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பழனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய் வார்டு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப்பிரிவு கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, காணொளிக் காட்சி வாயிலாக பழனி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று நன்றியுரை ஆற்றினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

பழனி அரசு மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பழமையான மருத்துவமனையாகும், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக பழனி, அரசு மருத்துவமனை, 1940 –ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. பழனி, அரசு மருத்துவமனை 07 ஏக்கர் இடப்பரப்புடன் தற்போது 207 படுக்கை வசதிகளும், 14 உள்ளிருப்பு சிகிச்சைப் பிரிவுகளும், 30 சிறப்பு மருத்துவர்களும், 05 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 48 செவிலியர்கள், 19 தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் 20 தொழில்நுட்ப பணியாளர்களும், 21 மருத்துவம் சாரா பணியாளர்களும், சிறப்பு திட்டங்கள் பிரிவில் 35 பணியாளர்கள் மற்றும் புற ஆதார அமைப்பின் மூலம் 37 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

பழனியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்காக கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கு சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு மேலும், திண்டுக்கலிற்கு சுமார் 60 கிலோ மீட்டர்களுக்கு மேலும் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவற்றில் 70%-ற்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பழனி, அரசு மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

பழனி, அரசு மருத்துவமனை, மாநில அரசு அளவில் NQAS , LAQSHYA தரச்சான்றிற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு அளவில் KAYAKALP- தரச்சான்று பெற்றுள்ளது. நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக டிஜிட்டல் நுண்கதிர் பிரிவு பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ ஆய்வகமும், முடநீக்கியல் சிகிச்சை பிரிவும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்தப்பட்டு 400 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு தேவையான கட்டிடங்கள் 70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது 9 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் 56 கூடுதல் படுக்கைகளுடன் (தரைத்தளம் அவசர சிகிச்சை பிரிவு ,TAEI பிரிவு ( முதல் தளம் –அறுவைசிகிச்சைக்குபின் கவனிப்பு பிரிவு ,இரண்டாவது தளம் அறுவை சிகிச்சை அரங்கு, மூன்றாவது தளம் –அலுவலகம் நான்காவது தளம் –அலுவலகம்) கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 9 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. அந்த திட்ட முகாமில் இதுவரை 16,831 பயனாளிகள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். மருத்துவத்துறையில் கடந்த நான்காண்டுகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.103 கோடி மதிப்பீட்டில் 64 புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் சார;பாக ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை அரங்கம் மற்றும் சிகிச்சைப்பிரிவு மற்றும் ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிசு சிகிச்சைப்பிரிவு புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.102 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ரூ.2 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டில் 56 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பழுது மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது ரூ.9 கோடி மதிப்பீட்டிலான இந்த மருத்துவமனை கட்டிடம் 56 கூடுதல் படுக்கைகளுடன் (தரைத்தளம்-அவசர சிகிச்சை பிரிவு,வுயுநுஐ பிரிவு,முதல் தளம்-அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு பிரிவு, இரண்டாவது தளம்-அறுவை சிகிச்சை அரங்கு, மூன்றாவது தளம்-அலுவலகம், நான்காவது தளம்-அலுவலகம் என கட்டப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பழனி அரசு மருத்துவமனை 70 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகளுடன் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. பழனி நகராட்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பயன்பாட்டிற்கு மருத்துவனை கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், இணை இயக்குநர்(சுகாதார பணிகள்) திரு.உதயக்குமார், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, பழனி நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.