மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
.

செ.வெ.எண்:-22/2025

நாள்: 11.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத்தொடரந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,
சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத்தொடரந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இக்கிராமசபை கூட்டத்தில் கிராம மக்களின் மூன்று அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல். இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும பணி முன்னேற்ற அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை, தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், சபாசார் செயலி செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.

காவேரி குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 196 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. காவேரி குடிநீர் வரும் போது அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சனை தீர்ந்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து போது, ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை 60 வயது கடந்தால் வழங்கப்பட்டது. அதேபோல் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார். தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி கலைஞர் கனவு இல்லம் கட்டிதரப்படும்.

அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தயாராக உள்ளது. இது உங்களுடைய அரசு, மக்களின் அரசு என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி ஊராட்சி முல்லை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு 5 உறுப்பினர்களுக்கு ஆடுவளரப்பு, விவசாயம், பூவியாபாரம், பெட்டிக்கடை ஆகிய தொழில்கள் செய்வதற்கு தலா ரூ.40,000 கடனுதவிகளும், ஜெயம் மகளிர் சுயஉதவிக்குழு 2 உறுப்பினர்களுக்கு சிற்றுண்டி, தையல் தொழில் செய்வதற்கு தலா ரூ.50,000 வீதம் என மொத்தம் ரூ.3.00 இலட்சத்திற்கான பல்வேறு கடனுதவிகள் மற்றும் 6 தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.