மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு மதிப்பீட்டு மூகாம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024

செ.வெ.எண்:-47/2024

நாள்:-17.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு மதிப்பீட்டு மூகாம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தகவல்

மத்திய அரசின் அதிகாரமளிப்பு துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனம் மூலம் (ALIMCO) மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவண்டி, சக்கரநாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, முடநீக்கு சாதனம், செயற்கைகால், ஊன்றுகோல், ரோலேட்டர், பிரெய்லிகிட், பார்வையற்றோருக்கு அதிரும் ஊன்றுகோல், பிரெய்லிசிலேட், மனவளர்ச்சி குன்றியயோருக்கு TLM Kit, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ADL Kit போன்ற உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கி வருகிறது. மேற்படி நிறுவனம் மூலம் வழங்கப்படும் உபகரணங்கள் பெறுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் வழங்கப்படும் உதவி உபகரணங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு மூகாம் கீழ் 10 வட்டங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அலிம்கோ நிறுவனத்திலிருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனாளிகள் தேர்வு செய்ய உள்ளார்கள்.

அதன்படி, 24.09.2024 (செவ்வாய் கிழமை) அன்று ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 25.09.2024 (புதன் கிழமை) அன்று நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 26.09.2024 (வியாழன் கிழமை) அன்று குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 27.09.2024 (வெள்ளி கிழமை) அன்று வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 28.09.2024 (சனி கிழமை) அன்று செம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 30.09.2024 (திங்கள் கிழமை) அன்று கொடைக்கானல் மூஞ்சுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 01.10.2024 (செவ்வாய் கிழமை) அன்று நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 03.10.2024 (வியாழன் கிழமை) அன்று ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 04.10.2024 (வெள்ளி கிழமை) அன்று பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 05.10.2024 (சனி கிழமை) அன்று திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவடத்தில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டைநகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, போட்டோ-2 மற்றும் UDID கார்டுநகல் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மாற்றுதிறனாளிகள் தங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகாமையில் நடைபெறும் ஏதேனும் ஒரு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.