மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025
.

செ.வெ.எண்:-84/2025

நாள்:-22.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 343 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.10.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம், ஆட்டோ மற்றும் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை 2425 நபர்களுக்கு ரூ.52,87,700-ம், திருமணம் உதவித்தொகை 184 நபர்களுக்கு ரூ.34,98,000 -ம், கண்கண்ணாடி உதவித்தொகை 4 நபர்ளுக்கு ரூ.3000-ம், இயற்கை மரணம் உதவித்தொகை 25 நபர்களுக்கு ரூ.12,75,000-ம், விபத்து மரணம் உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.3,35,000-ம் மற்றும் ஓய்வூதியம் 672 நபர்களுக்கு ரூ.9,01,200-ம் ஆக மொத்தம் 3312 நபர்களுக்கு ரூ.1,12,94,900 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு கண் கண்ணாடி, வாட்ச், ஊன்றுகோல் மற்றும் 03 பயனாளிகளுக்கு ரூ.47250 மதிப்பீட்டில் வீல் சேர், 04 பயனாளிகளுக்கு ரூ.45780 மதிப்பீட்டில் சைக்கிள் போன்ற நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கிகளுக்கு பாராட்டு விருது வழங்கிடும் வகையில் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிட சிறப்பாக பணிபுரிந்த திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி லிட் வங்கிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் காந்திகிராமம் கனரா வங்கிக்கு ரூ.15,000/- ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள், நத்தம் எச்.டி.எப்.சி வங்கிக்கு ரூ.10,000/- ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள், கொடைரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.5,000/- ரொக்க பரிசு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்காட்டுப்பட்டு வாரியம். திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டி நீர்வளம் இணைந்து நடத்திய திண்டி நீர்வளம் மற்றும் ”மாபெரும் நெகிழி சேகரிப்பு இயக்கம்” சார்ந்த சுவர் ஒவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.