டாக்டர் டி.ஜி.வினய்., இஆப

மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் டாக்டர். டி.ஜி.வினய், 2009ம் வருட தொகுதி இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். பெங்களுருவில் எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லுரியில் M.B.B.S. மருத்துவப்படிப்பு தேற்ச்சி பெற்றதும், பொது சேவையில் விருப்பமும் குறிக்கோளும் கொண்டு 2009ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில், அகில இந்திய அளவில் 50 வது தரத்தில் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியேற்பதர்க்கு முன் நாமக்கல் சார் ஆட்சியராகவும், கருர் மாவட்டதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், பெருநகர் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பொது மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளக கொன்டுள்ள இவர் திண்டுக்கல் மாவட்டதில் நீர் மேலாண்மை, நீர்நிலைகளை தூர் வாருதல், பாதுகாத்தல், மறுசீரமைப்பு செய்வது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் மலை வாழ் மக்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் கொன்டு சேர்ப்பது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பணியற்றி வருகிறார்.