வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்: 36/2025
நாள்: 14.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விருவீடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அலங்கார வண்ண மீன் வளர்க்கும் பண்ணையை பார்வையிட்டார். மேலும், இந்த மீன் பண்ணையில் பல்வேறு வண்ண மீன்கள் வளர்ப்பு முறைகள், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா ஆகிய இடங்களுக்கு மொத்தமாக அலங்கார வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், இப்பகுதியில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு நடுத்தர அலங்கார மீன் வளர்ப்புகீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கி நடைபெற்று வரும் அலங்கார மீன்பண்ணை வளர்ப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
தொடர்ந்து, விருவீடு ஊராட்சியில் பகவதியம்மன் மகளிர் குழுவிற்கு சமுதாய முதலீட்டு கடனாக ரூ.1.50 இலட்சம் வழங்கி அங்கு செயல்பட்டு வரும் மஹா பியூட்டி பார்லர் கடையை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சந்தையூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் 2025-2026ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை திட்டத்தின்கீழ் கொய்ய பதியம், மா ஒட்டு செடிகள் வளர்ப்பு, தக்காளி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி, மல்லிகை செடிகள் வளர்ப்பு. செவ்வந்தி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டார். மேலும், மனாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கொடுக்காபுளி பதியம் செய்யும் பணிகள், சீத்தாபழ நாற்று வளர்க்கும் பணிகள், நெல்லி ஒட்டு செடிகள் வளர்க்கும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், குன்னுவராயன்கோட்டை ஊராட்சி நியாயவிலைக்கடையில் பொருள்களின் இருப்பு, பொருள்களின் தரம், பொருள்களின் எடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இப்பகுதியில் செயல்பட்டு வரும் யோகேஷ்வரன் பத்தி, சூடம், சாப்பிராணி தயாரிப்பு நிலையத்தினை பார்வையிட்டார்.
மேலும், கணவாய்ப்பட்டி காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நியாயவிலைக் கடை கட்டிடம் கட்டுமானப் பணிகள், ஜெ.ஜெ.எம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.29.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60,000 கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, காமராஜர்புரத்தில் திண்டிமாவனம் சார்பில் ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனை பார்வையிட்டார். கே.புதுப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டம் 2025-2026கீழ் ரூ.5.77 கோடி மதிப்பீட்டில் 84 இலங்கை தமிழர் மறுவாழ் குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குப்புச்சாமி, திரு.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.