மூடு

வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
.

செ.வெ.எண்:-83/2025

நாள்:-18.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(18.11.2025) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, பழங்குடியினர் மற்றும் மரபு வழி வன வாழ்வினர்களுக்கு தனி நபர் உரிமைகள், மற்றும் சமுதாய உரிமைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை சுமார் 1874 மனுக்கள் வரப்பெற்ற நிலையில், கிராம சபைலிருந்து SDLC க்கும், SDLC யிலிருந்து DLC க்கும் DLC யிலிருந்து பழங்குடியினர் மற்றும் மரபு வழி வன வாழ்வினர்களுக்கு தனி நபர் உரிமைகள் மற்றும் சமுதாய உரிமைகள் வழங்கப்பட உள்ளது, அதன் முதல் கட்ட நடவடிக்கையான கள ஆய்வு பணியை தொடங்குவதற்கு வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சேர்ந்து கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

அதற்காக சென்னை பழங்குடியினர் நலத்துறை முலம் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர் திரு.ராஜன் அவர்களால் வன உரிமைச்சட்டம் 2006 குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இப்பயிற்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ராஜகுரு அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கள ஆய்வில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார், மேலும் வனத்துறையில் உள்ள ரேஞ்சர்ஸ், வனவர் மற்றும் வனகாப்பாளர்கள் , வருவாய்த்துறையில் உள்ள வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.