வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலங்களில் பெறப்பட்ட படிவங்கள் (6, 6A 7,8) தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது
செ.வெ.எண்:-98/2026
நாள்: 31.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலங்களில் பெறப்பட்ட படிவங்கள் (6, 6A 7,8) தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்
vதிண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)-2026 நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலமான 19.12.2025 முதல் 31.01.2026 வரை பெறப்பட்ட 6, 6A,7, 8 படிவங்களின் விபரம் கீழ்கண்டவாறு:-
| வ. எண் |
படிவங்களின் விபரம் | எண்ணிக்கை |
| 1 | படிவம்-6 | 54628 |
| 2 | படிவம்-6A | 4 |
| 3 | படிவம்-7 | 7818 |
| 4 | படிவம்-8 | 18367 |
மேற்கண்ட படிவங்களின் தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களால் வழங்கப்பட்டு அதற்குரிய ஒப்புகை பெறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலங்களில் உள்ள விளம்பரப் பலகையில் படிவம் 6, 6A,7,8 உரிய தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) ஒட்டி விளம்புகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அதனை பார்வையிட்டு விபரம் தெரிந்து கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.