மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது, மேலும் தீவிர திருத்த பணிகள் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2025

செ.வெ.எண்:-117/2025

நாள்: 30.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது, மேலும் தீவிர திருத்த பணிகள் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்களின் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கப்பட்டு, அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நேர்வில் தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் 30.11.2025 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெற 11.12.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர் பணிகள் விபரம் பின்வருமாறு.

S. No Activities  Schedule
1 Enumeration Period By 11.12.2025 (Thursday)
2 Rationalization/Re-arrangement of Polling Stations By 11.12.2025 (Thursday)
3 Updation of control Table and Preparation of draft roll 12.12.2025 (Friday) to 15.12.2025 (Monday)
4 Publication of draft electoral roll On 16.12.2025 (Tuesday)
5 Period for filling claims & objections 16.12.2025 (Tuesday) to 15.01.2026 (Thursday)
6 Notice phase (Issuance, hearing and verification) decision on Enumeration forms and Disposal of claims and objections to be done concurrently by the EROs 16.12.2025 (Tuesday) to 07.02.2026 (Saturday)
7 Checking of health parameters of electoral rolls and obtaining Commissions permission for final publication By 10.02.2026 (Tuesday)
8 Final publication of Electoral Roll On 14.02.2026 (Saturday)

எனவே, கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து எதிர் வரும் 11.12.2025 வரை தொடர்ந்து பெறப்படும். எந்த ஒரு தகுதியான வாக்காளர்களும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதே இச்சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் ஆகும். கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப ஒப்படைக்கப்படாத வாக்காளர்கள் அனைவரும் தங்களது பாகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தவறாது ஒப்படைக்குமாறும், கணக்கெடுப்பு படிவங்கள் மீள ஒப்படைக்காத வாக்காளர்கள் தங்களது படிவங்களை திரும்ப ஒப்படைக்கும்பட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தவறாது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.