அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் கல்வி, சுயதொழில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயி
செ.வெ.எண்:-10/2025
நாள்:-06.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் கல்வி, சுயதொழில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் 3359 பயனாளிகளுக்கு சுமார் ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் கல்வி, சுயதொழில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (06.12.2025) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 3359 பயனாளிகளுக்கு சுமார் ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.1,67,250 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு ரூ.17,600 ஆயிரம் மதிப்பீட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஓய்வூதியமும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமை பட்டா மற்றும் பழங்குடியினர் குடும்ப நல அட்டை 125 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.1,30,00,257 கோடி மதிப்பீட்டிலும், PM-AJAY திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.48,66,30,240 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் CWWB திட்ட நல உதவிகள் 50 பயனாளிகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இ-பட்டா 450 பயனாளிகளுக்கு ரூ.2,04,02,900 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில், 2 பயனாளிகளுக்கு வட்டார வணிக வள மையம் அமைக்க கடனுதவிகளும், 4 பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்பு கடனுதவிகளும் மற்றும் 2,260 பயனாளிகளுக்கு ரூ.2,81,87,000 கோடி மதிப்பீட்டில் நலிவு நிலை குறைப்பு கடனுதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (பொது விநியோகம்) மூலம் 20 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (கூட்டுறவு) மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1,11,38,000 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும் மற்றும் KCC திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.47,50,000 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், தமிழ்நாடு தொழில் வணிக துறை (மாவட்ட தொழில் மையம்) மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.84,69,000 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், வேளாண்மைத்துறை மூலம் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை உழவர் அட்டை 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.30,375 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், மிளகு பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.36,000 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், முன்னோடி வங்கியின் மூலம் கறவை மாடு கடனுதவி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.50,000 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவிகளும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.4,86,000 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் துறையின் மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ.63,88,000 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகளும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.36,000 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகையும் மற்றும் 2 பயனாளிகளுக்கு ரூ.65,000 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும், வாழ்ந்து காட்டுவோம் மூலம் நுண் கடன் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.3,50,000 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.1,55,00,000 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் அமைக்க கடனுதவிகளும், மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.5,09,000 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனமும், 15 பயனாளிகளுக்கு ரூ.2,83,750 இலட்சம் மதிப்பீட்டில் வீல் சேர்களும், 9 பயனாளிகளுக்கு ரூ.57,231 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், 31 பயனாளிகளுக்கு ரூ.4,49,190 இலட்சம் மதிப்பீட்டில் கைப்பேசிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24,360 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரமும் மற்றும் 10 பயனாளிகளுக்கு ரூ.67,000 ஆயிரம் மதிப்பீட்டில் தேய்ப்பு பெட்டிகளும் என மொத்தம் 3,359 பயனாளிகளுக்கு ரூ.59,70,94,153 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.
விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்றைய தினம் அன்னாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஜாதியினரும் ஒன்றாக வாழ வழிவகை ஏற்படுத்தினார். கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில்தான் தமிழ்நாட்டில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் 8 இடங்களில் சமத்துவபுரங்கள் அமைக்க அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்காக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் அமைச்சர் பெருமக்களுடனான ஒரு குழுவை அமைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம், விபத்திற்கு உள்ளான நபர்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றால் முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவுத் தொகையாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படும் ”நம்மைக் காக்கும் 48” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படாத “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார்கள். மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டதில், 29 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்களில் தகுதியான நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 12.12.2025-அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிழச்சி நடைபெறவுள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”எல்லோருக்கும் எல்லாம்” பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாது சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் உறுதுணையாக, ஆதரவாக இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு, மாவட்ட தாட்கோ மேலாளர் திரு.செல்வக்குமார் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சி.தங்கவேலு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.