மூடு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

செ.வெ.எண்:-03/2024

நாள்:-02.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), திண்டுக்கல்(குள்ளனம்பட்டி) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை முடிவுபெற்ற நிலையில், ஐ.டிஐ.-ல் சேர விரும்புவோர்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 01.07.2024 முதல் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கை 15.07.2024 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant), டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desk Top Publishing Operator), நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design and Technology) ஆகிய ஓராண்டு பாடப்பிரிவுகளில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information and Communication Technology and System Maintancence) இரண்டு ஆண்டுகள் பிரிவில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில் நுட்பம் (Sewing Technology), அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் (Surface Ornamentation Technique (Embriodery) ஆகிய ஓராண்டு பாடப்பிரிவில் சேர 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறன் மின்னணுவியல் தொழில்நுட்பப் பணியாளர்(Technician Power Electronic Systems) இரண்டு ஆண்டுகள் பிரிவில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது அலைபேசி 9499055764 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்,

திண்டுக்கல், நத்தம் மெயின்ரோடு, குள்ளனம்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பாடப்பிரிவுகளின் விபரம், காலியிடங்கள், சேர்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள்: 0451 – 247 1411 மற்றும் 0451 – 2471412, அலைபேசி எண்கள்: 9789789927, 9499055762 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், மின்சார பணியாளர்(Electrician), நில அளவையாளர்(Surveyor), ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிசனிங் டெக்னிசியன்(Refrigeration and Air Conditioning Technician) ஆகிய 2 ஆண்டு கால பாடப்பிரிவுகளில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பழுது நீக்குபவர் மற்றும் வலைதளம் பராமரிப்பவர்(Computer Hardware and Networking Maintanence) ஓராண்டு பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு, ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ, தொலைபேசி இணைப்பு எண் 04545 295090, அலைபேசி எண்கள் 9095905006, 9443365816, 9159307614, 8012090959 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட பயிற்சிகளில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை. இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி உண்டு, விலையில்லா மிதிவண்டி மற்றும் வரைபடக் கருவிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் என்சிவிடி(NCVT) சான்றிதழ், ஆண்டுதோறும் விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி ஆகியவை வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.