மூடு

அறிவியல் விழா-2026

வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025

செ.வெ.எண்:-77/2025

நாள்:-31.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து ஜனவரி 2026-இல் நடத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டலில் அறிவியல் கோலப் போட்டி (Science Kolam Competition) அறிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் கலந்து கொள்ளலாம். அறிவியல் கருவிகள், விஞ்ஞானிகள், அறிவியல் தத்துவங்கள், சூத்திரங்கள் போன்ற எந்தவொரு உருவங்களைக் கொண்டும் கோலம் வரையலாம். கம்பிக் கோலம், ரங்கோலி, ப்ரீ ஸ்டைல் என்ற எந்த வடிவிலும் இருக்கலாம். உங்கள் வீட்டு வாசல், நிறுவன வாசல், கல்வி வளாகங்கள் என எந்த இடத்திலும் வரையலாம். கோலத்தைப் படமாக எடுத்து உங்கள் சமூகத் தளங்களில் #dindigulsciencefest என்ற tag உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தமிழரின் கோலக் கலையை நவீனப்படுத்துவதுடன் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவ வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டி வருகின்ற 02.01.2026 முதல் 15.01.2026 வரை நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்ட அறிவியல் கோலங்களுக்கு 2026 திண்டுக்கல் அறிவியல் திருவிழாவில் பரிசளிக்கப்பட்டு, காட்சிக்கும் வைக்கப்படும். மேலும், விவரங்கள் https://dindigulsciencefest.com/kolam என்ற இணையதளப் பக்கத்தில் உள்ளன. கோலப் போட்டி தொடர்பான விவரங்களுக்கு திரு.சைமன் அவர்களை 7708928527 என்ற அலைபேசி எண்ணிலும் மற்றும் simonvis.com@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.