மூடு

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ)த்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025

செ.வெ.எண்:-74/2025

நாள்:-17.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ)த்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கம் என்பதனை கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை திறம்பட செயல்படுத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் பொருட்டு கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2021-2022ஆம் நிதியாண்டு முதல் 2025-2026 வரை தொழில்முனைவோர் கடன் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கடன் திட்டம், நில மேம்பாட்டுக் கடன் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம், சி.எம் அரைஸ், பி.எம்.அஜய், நன்னிலம் மகளிர் நில உடைமைத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மொத்தம் 1228 பயனாளிகளுக்கு ரூ.1526.35 இலட்சம் தாட்கோ மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், சந்தை பேட்டை தெருவை சேர்ந்த திருமதி.க.ராஜலெட்சுமி என்பவர் தெரிவித்ததாவது,

எனது பெயர் ராஜலெட்சுமி, நான் வேடசந்தூர் வட்டம், சந்தை பேட்டை தெருவில் வசித்து வருகின்றேன். எனது கணவர் திரு.கணேசன் விஸ்டார் ஹோம் லோன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 7 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவரின் வருமானத்தில் நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். சொந்தமாக தொழில் தொடங்கிட வேண்டும் என்றால் எங்கள் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் தொடங்குவதற்கு முடியவில்லை.

இந்நிலையில் தான், தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து, அதன் பின்னர் சி.எம் அரைஸ் திட்டத்தின்கீழ் கம்புயு+ட்டர் சென்ட்ர் தொழில் தொடங்கிட கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன். தாட்கோ துறை அலுவலர்கள் விண்ணப்பத்தினை ஆய்வு மேற்கொண்டு, ரூ.9,95,500/- கடனுதவி வழங்கினர். அதற்கு அரசு மானியமும் கிடைக்கப்பெற்றது.

இதனைக் கொண்டு எங்கள் ஊரில் சிறிய கம்புயு+ட்டர் சென்ட்ர் வைத்து தொழில் செய்து வருகிறேன். அதில் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் ரூ.14,760/- வங்கிக்கு செலுத்தி வருகிறேன். எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி வறுமையை போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து, நாகல் நகரை சேர்ந்த திரு.மா.வேல்முருகன் என்பவர் தெரிவித்ததாவது, எனது பெயர் மா.வேல்முருகன், நான் திண்டுக்கல்நாகல் நகரில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகி 9 வயது மகனும் 6 வயதில் மகளும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். நான் 15 வருடங்களாக வாடகை ஆட்டோ ஓட்டி வந்தேன். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பம் நடத்திட மிகவும் சிரமமாக இருந்தது.

சுயமாக ஆட்டோ வாங்கி தொழில் நடத்தலாம் என்றால் பொருளாதார நிலை காரணமாக ஆட்டோ வாங்க இயலாமல் தவித்து வந்தேன். தனியாரிடம் கடன் பெற்றால் அதற்கு வட்டி செலுத்த சிரமப்படும் நிலை ஏற்படும் என்பதால் மிகவும் கஷ்ட நிலையில் தவித்து வந்தேன்.

இந்நிலையில் தான், தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து, அதன் பின்னர் சி.எம் அரைஸ் திட்டத்தின்கீழ் ஆட்டோ வாங்க எனக்கு கடனுதவிக் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு ரூ.4,05,000/- கடனுதவி வழங்கி, அரசு மானியமும் கிடைக்கப்பெற்றது. இதனைக் கொண்டு நான் சொந்தமாக ஆட்டோ வாங்கி தொழில் நடத்தி வருகிறேன். அதில் போதிய வருமானம் கிடைக்கிறது. வாங்கிய கடனுக்காக மாதம் ரூ.6300/- வங்கிக்கு செலுத்தி வருகிறேன். சொந்த தொழில் என்பதால் நான் என் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ள போதிய நேரம் கிடைக்கிறது. இதனால் எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை போன்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்து வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலைகளை மற்ற சமுதாயத்தினருக்கு நிகரான மேம்படுத்தியும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியும், மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதால், பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதே திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் எழுச்சிமிகு கருத்தாக உள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.