ஆலோசனை கூட்டம்
செ.வெ.எண்:-81/2024 நாள்:-28.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
தன்னார்வளர் அமைப்புடன் இணைந்து பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் எரிவாயு தகன மேடை சேவை வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னார்வளர் அமைப்புடன் இணைந்து பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் எரிவாயு தகன மேடை சேவை வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் எரிவாயு தகன மேடை கட்டப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை தன்னார்வளர் அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவது தொடர்பாக குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விரைவில் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஜ.நாகராஜன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, உறுப்பினர்கள்இ தன்னார்வளர் நிறுவனங்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாசுகட்டுப்பாட்டு வாரியம் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.