மூடு

இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2024

செ.வெ.எண்:-78/2024

நாள்:30.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான விருது வழங்கப்பட்ட உள்ளது.

சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழு ஒப்புதலுடன் மாவட்டத்துக்கு தலா ஒரு விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலான குழு உறுப்பினர்கள் பரிசீலனை செய்து பரிசு வழங்க தேர்ந்தெடுப்பர்.

தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.