இராஜக்காபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-05/2024
நாள்:-07.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
இராஜக்காபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், இராஜக்காபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(07.11.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவ, மாணவிகள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர் என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். காலை உணவு வழங்கப்படுவது குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் சமையல் கூடத்தில் மதிய உணவு தயார் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் துாசு இல்லாமல் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர்(கல்வி) திரு.அ.சரவணக்குமார், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.