உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-16/2024
நாள்:-07.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் அக்டோபர்-2024 மாதம் 16, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் (Value Added Products) போன்ற இனங்களில் பழனி வட்டம் பாலாறு பொருந்தலாறு அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணையில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பயனாளிகள், “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, டிஎம்எஸ்எஸ்எஸ் எதிரில், நேரூஜி நகர், திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அல்லது அலைபேசி எண்கள் 9943366375, 9751664565, 9750430221 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.