உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
செ.வெ.எண்:-02/2025
நாள்:01.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் இன்று (01.11.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக கிராமங்கள் விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கலைஞரின் கனவு இல்ல திட்டம், முதலமைச்சரின் கிராமசாலைகள் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக 18 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்கள் உள்ளன. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராமங்கள் உள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சாலை வசதிகள், பாதாள சாக்கடை வசதிகள், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் பொருளாதாரத்தில் வளரச்சி அடைய வேண்டும் என்பதற்காக கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 20 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். விடுபட்ட பெண்களுக்கும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை 6200 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 3800 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கணவாய்பட்டி, தும்லப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட 303 மனுக்களையும் சரிபார்த்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கருவுற்ற தாய்மார்களை அப்பகுதியில் பணியாற்றும் செவிலியர்களும், அங்கனவாடிப் பணியளர்களும் தங்களது குழந்தைகள் போல் மாதந்தோறும் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 1000 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் அவர்களின் ஊதியத்தை அதிகரிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
மேலும், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவி காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ந.சீனிவாச பெருமாள், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன், குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.சத்திய நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ப.முருகேசன் மற்றும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

Oplus_16908288

.

.