மூடு

எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
.

செ.வெ.எண்:-27/2025

நாள்: 11.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை இன்று (11.12.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

சட்டமன்ற பொது தேர்தல்-2026 தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் இன்று (11.12.2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் மேற்கொள்வதற்கு 9 பெல் நிறுவன மின் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, முதல் நிலை சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை இன்று (11.12.2025) காலை 9.40 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடந்து விடுமுறை நாட்கள் தவிர்த்து தினந்தோறும் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை முதல் நிலை சரிபார்ப்பு நடைபெறும்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.