மூடு

எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2024

செ.வெ.எண்:-28/2024

நாள்:-25.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தை 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றும் இலக்கு நிர்ணயம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின்கீழ் 2022-2023 கல்வியாண்டு முதல் இதுவரை 35,046 நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக முன்னேற்றும் நோக்கத்தோடு எழுதப் படிக்கத் தெரியாத நபர்களைக் எவ்வித விடுதலுமின்றி கண்டறியும் கணக்கெடுப்புப் பணி பள்ளித் தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றது. 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாத நபர்கள் எவரும் விடுபடா வண்ணம் கண்டறிந்து, அவர்களுக்கு எளிய வார்த்தைகள், ஊர் பெயர் போன்றவற்றை படித்தல்/எழுதுதல், நிதிசார்ந்த கல்வியறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம், உடல்நலம், குழந்தை நலம், குடும்ப நலம், வணிக கல்வியறிவு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த திறன் வளர்ச்சி, தொடர்ந்து கற்றல் போன்ற பயிற்சிகள் எவ்வித கட்டணமுமின்றி, அவரவர் குடியிருப்பு பகுதிகளிலேயே நேரடியாக தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, பென்சில் மற்றும் சிலேட்டு போன்றவை வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 6 மாதங்களுக்கு, நாளொன்றுக்கு 2 மணி நேரம் வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் இணைந்து 6 மாதங்கள் பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இத்திட்டம் முற்றிலும் தன்னார்வல அடிப்படையிலானது. இத்திட்டத்தின்கீழ் தொண்டுள்ளத்தோடு மக்களுக்கு கல்வியறிவு வழங்கும் அறப்பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்/அலுவலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அல்லது கீழ்க்காணும் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

15 வயதிற்கு மேற்பட்ட எவரும் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கல்வியறிவு பெற்றிட, விருப்பமுள்ள நபர்கள் கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான அலுவலர்கள்

உதவித்திட்ட அலுவலர்கள்

1. திரு.க.செல்வராஜ் – 7373002632

2. திரு.தி.திருப்பதி – 9788858599

3. திரு.ஆ.வடிவேல் – 9865214613

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

1. திருமதி.மோ.ஜெயலட்சுமி – 9788858606

2. திரு.ஷா.சலீம்ராஜா – 9942480980

3. திரு.கி.மணிகண்டன் – 9952720302

ஒன்றியம் வாரியான தொடர்பு அலுவலர்கள்

வ. எண் ஒன்றியம் பொறுப்பு அலுவலர் பெயர்  கைபேசி எண்
1 ஆத்தூர் திருமதி K.N.ஜெயக்குமாரி 9788858609
வத்தலக்குண்டு திரு. S.முருகன் 9788858610
திண்டுக்கல்புறநகர் திரு. M.சேவியர் 9788858611
திண்டுக்கல்நகர் திரு. M.ராஜ்குமார்  9788858623
குஜிலியம்பாறை திருமதி S.அமுதா 9788858612
கொடைக்கானல் திருமதி F.சகாயசெல்வி 9788858613
நத்தம் திருமதி R.மஞ்சுளாதேவி 9788858614
நிலக்கோட்டை திரு. S.கருப்பையா 9788858615
ஒட்டன்சத்திரம் திரு. S.முனித்துரை 9788858616
பழனி திருமதி K.பூங்கோதை 9788858617
ரெட்டியார்சத்திரம் திருமதி K.மேகலாதேவி 9788858618
சாணார்பட்டி திருமதி S.புவனேஸ்வரி 9788858619
தொப்பம்பட்டி திரு. P.பழனிச்சாமி 9788858620
வடமதுரை திரு. C.பாலமுருகன் 9788858621
வேடசந்தூர் திருமதி F.சகாயராணி 9788858622

ஆகியோர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.