ஒட்டன்சத்திரம், ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-46/2025
நாள்:-15.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரம், ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(15.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளும், 234 உட்கடை கிராமங்களும், 32,665 வீடுகளும் உள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3004.03 இலட்சம் மதிப்பீட்டில் 851 கலைஞர் கனவு வீடுகள் கட்டுமான பணிகளும், பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் 2024-2025 திட்டத்தின்கீழ் ரூ.664.47 இலட்சம் மதிப்பீட்டில் 961 வீடுகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் காப்பிளியப்பட்டி ஊராட்சி, கிருஷ்ணகவுண்டன் புதூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 27 கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணிகளையும், கொசவபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கு புறம் கான்கீரிட் மேற்கூரை பழுது மற்றும் சீரமைப்பு பணிகளையும், ரூ.3.73 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறையின் வடபுறம் கான்கீரிட் மேற்கூரை பழுது மற்றும் சீரமைப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், காவேரியம்மாபட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலையரங்கம் கட்டம் கட்டுமான பணிகளையும், விருப்பாட்சி ஊராட்சி ஜீவாநகர் புதூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 10 கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, விருப்பாட்சி ஊராட்சி தலையூற்று அருவியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் அடிபடை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) தேர்வு நடைபெறவுள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடர்பான உத்தேச பட்டியல் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் கே.ஆர் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பரப்பலாறு அணையின் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை, தற்போதைய நீரின் இருப்பு, நீர் வெளியேற்றம், பரப்பலாறு அணையின் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, செயற்பொறியாளர் (பரப்பலாறு) திரு.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.