மூடு

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2025
.

செ.வெ.எண்:-45/2025

நாள்:-15.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(15.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி பகுதியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை 29.01.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.

அதன்படி இன்றைய தினம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 தரை தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.66.23 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் குடிசையில் வாழ்கின்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கழிப்பறை, மின் வசதிகள், விளையாட்டு மைதானம், நியாயவிலைக்கடை ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

இந்த ஆய்வின் போது, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், உதவிபொறியாளர் திருமதி திவ்யலெட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.