மூடு

“கலைஞர் கடன் உதவித் திட்டத்தில்” குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 22/11/2024

செ.வெ.எண்:-47/2024

நாள்:-21.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

“கலைஞர் கடன் உதவித் திட்டத்தில்” குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7 சதவீதம் வட்டியில் ரூ.20 இலட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் “கலைஞர் கடன் உதவி திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தாய்கோ வங்கி கிளைகள் (திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 65-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் உள்ள ஏற்கனவே இயங்கும் நிறுவனங்கள் மற்றும் இரண்டு வருடங்களுக்கு லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களையும் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

இத்திட்டத்தில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பேரில் வங்கியின் நடைமுறையின்படி கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு கிளை மேலாளர், தாய்கோ வங்கி, என்விஜிபி ஹால் சாலை, நாகல் நகர், திண்டுக்கல்-624003 (தொடர்பு எண் 0451-2433351, 9080765150), கிளை மேலாளர், தாய்கோ வங்கி, என்கேஎஸ் காம்ளக்ஸ், பழனி சாலை, ஒட்டன்சத்திரம்-624619 (தொடர்பு எண் 04553-244040, 9629098842) மற்றும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ வளாகம், திண்டுக்கல் – 624001 (தொடர்பு எண் 8925533943) என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.