மூடு

கல்லூரி சந்தை விற்பனைக் கண்காட்சி எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

செ.வெ.எண்:-83/2025

நாள்:-22.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

கல்லூரி சந்தை விற்பனைக் கண்காட்சி எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் உற்பத்திப் பொருளான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டிற்கு நான்காம் கட்டமாக திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை விற்பனை கண்காட்சி இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளதால், இக்கண்காட்சியில் கலந்து கொள்ள ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யப்பட உள்ளதால், அதிகளவில் கல்லூரி மாணவ/மாணவிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.