மூடு

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2024
.

செ.வெ.எண்:-19/2024

நாள்:-08.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.10.2024) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக மூன்றாம் கட்டமாக திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று(08.10.2024) தொடங்கி 10.10.2024-ஆம் தேதி வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது.

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 37 மகளிர் சுய உதவிக்குழுக்களும் மற்றும் திருச்சி, தேனி, மதுரை, இராமநாதபுரம் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து 4 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் என மொத்தம் 41 சுய உதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருட்களான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பொருட்களை வாங்கி மகளிர் சுயஉதவிக்குழுவினரை ஊக்கப்படுத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, பிஎஸ்என்ஏ கல்லுாரி டிரஸ்டி திரு.ஆர்.சூரியரகுராம், கல்லுாரி முதல்வர் முனைவர் வாசுதேவன், முனைவர் மணிமாறன், முனைவர் ஆலிஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் திரு.பெ.வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.