மூடு

கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2024
.

செ.வெ.எண்:-37/2024

நாள்:-13.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(13.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவ, மாணவியர்கள் நலனை பாதுகாத்திடவும், வரும் காலங்களில் கூடுதல் அறிவாற்றலுடன் இளைய மாணவ சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறையின் மூலம் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் பள்ளி கல்வி சார்ந்து இயங்கக்கூடிய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கல்வி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கும் வாய்ப்பினை மேம்படுத்திடும் வகையில் ஒருங்கிணைப்பு குழுவினை ஏற்படுத்தி மாதந்தோறும் குழுக்கூட்டத்தினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டத்தில் 1326 அரசு பள்ளிகள், 266 அரசு உதவிபெறும் பள்ளிகள், 56 பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள், 330 தனியார் பள்ளிகள், 1 மத்திய அரசு பள்ளி என மொத்தம் 1979 பள்ளிகளில் 3,35,832 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து குழு உறுப்பினர்கள் தங்களது துறை சார்ந்து ஆய்வு மேற்கொண்டு, அதனை உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பித்திட வேண்டும்.

பள்ளிகளின் வகுப்றைகள், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்திட வேண்டும். புதிய வகுப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வரும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும். நம்ம பள்ளி நம்ம ஊரு திட்டத்தின்கீழ் 36 பள்ளிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மாணவ, மாணவியர்களின் நலன் கருதி தமிழக அரசு போதையில்லா தமிழகத்தினை உருவாக்கிடவும், தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துகூறி நல் வழி காட்டிட வேண்டும்.

பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகாமால் தடுத்து, நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பாதுகாப்பிற்காக அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் விளம்பர பதாதைகள் வைத்திட வேண்டும். அரசின் திட்டங்கள் மூலம் பாதுகாப்பான சூழலில் சிறந்த கல்வியினை மாணவ, மாணவியர் பெறுவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் இராஜேஸ்வரி, சந்திரகுமார், அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.