கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-42/2024
நாள்:-19.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், ஆலம்பாடி கிராமம், தி/ள்.எஸ்.ஜி.கிரானைட்ஸ் பல வண்ண கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தினை கேட்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 22.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் தி/ள். ஆலம்பாடி ஊராட்சி சமுதாயக்கூடம், ஆலம்பாடி கிராமம், குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல் மாவட்டம் என்ற இடத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.