மூடு

”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் 02.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024

செ.வெ.எண்:-60/2024

நாள்:-27.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் 02.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“ 2024-2025 செயல்படுத்திடும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் 02.07.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில், ”கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” பயனாளிகள் தேர்வு ஒப்புதல் மற்றும் “கலைஞரின் கனவு இல்லம்“2024-2025 பயனாளிகள் தேர்வு ஒப்புதல் ஆகிய பொருள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து 306 கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.