கிராம சபைக் கூட்டம்
செ.வெ.எண்:-60/2026
நாள்:-21.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2026) முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு-செலவு திட்டம், தொழிலாளர் வரவு-செலவு திட்டப்பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத்திட்டம் ஆகிய பொருட்கள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.