குறிப்பிட்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது மற்றும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அரசு ஆணை எண் (D) 454, உள் (காவல்-XIII) துறை, நாள் 18.03.2026-ன் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் 21.04.2026 முதல் 24.04.2026 வரை மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். [PDF 46KB]