மூடு

குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2025
.

செ.வெ.எண்: 76/2025

நாள்: 31.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி, திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து ஊராட்சி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.10.2025) திடீர் ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப்பசியை நீக்கவும், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கவும், கல்வி கற்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம் என்பதற்காக இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
15.07.2024-அன்று தொடங்கி வைத்தார்கள்.

மேலும், தமிழகத்தில் அனைத்து நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை சென்னை மயிலப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் 26.08.2025-அன்று தொடங்கி வைத்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் செயல்படும் 1,153 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 156 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,076 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படும் 89 அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் பயிலும் 16,151 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆகமொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,398 பள்ளிகளில் பயிலும் சுமார் 85,557 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின்படி. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் சேமியா கிச்சடியுடன் காய்கறி சாம்பார், புதன் கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் அரிசி ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் கோதுமை ரவா கிச்சடியுடன் காய்கறி சாம்பார் ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து ஊராட்சி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு இருப்பு வைப்பறை, இருப்பு பதிவேடு, பெருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு இருப்பு வைப்பறை, இருப்பு பதிவேடு, பெருள்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.