மூடு

கொடைக்கானல் வட்டம், பெருமாள்மலையில் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024
.

செ.வெ.எண்:-67/2024

நாள்:-26.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் வட்டம், பெருமாள்மலையில் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பெருமாள்மலையில் உள்ள புனித சூசையப்பர் நற்பணி மன்றத்தில் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமில், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் (10th , 12th ITI, DIP, UG, PG Degree) முடித்த சுமார் 150 பழங்குடியின மாணவர்கள் கலந்துகொண்டனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் (DMI-அமலமரி புதல்வியர் சபை, Meera Foundation, Master Trust, Arockia Agam) மூலம் பல மாணாக்கர்கள் பங்கேற்று பயிற்சிப் பெற்றனர்.

படித்த பழங்குடியினர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னனி நிறுவனங்களில் தங்கும் மற்றும் உணவு வசதியுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, பழங்குடியினர் இளைஞர்களுக்கு இந்திய தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தவுள்ளனர். இதன்மூலம் பழங்குடியினர் இளைஞர்களின் பொருளாதாரம் தன்னிறைவு அடைந்து, இவர்கள் மற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ வழிவகை ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் ச.உதயகுமார், டாக்டர் எம்.சைமன், எம்.ராஜாமுகமத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.