மூடு

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட 3 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2024

செ.வெ.எண்:-10/2024

நாள்:-08.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட 3 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் 28.09.2024 அன்று ஒரு நபரை முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக, மதுரை, செல்லூர், கீழத்தோப்பு, முதலியார் 2வது தெரு, எண்.36, 80 வீடு என்ற முகவரியைச் சேர்ந்த திரு.கருத்தபாண்டி என்பவர் மகன் ஐ என்ற அய்யனார்(வயது 25), திண்டுக்கல் மேற்கு வட்டம், பொன்னிமாந்துறை அஞ்சல், சின்ன பொன்னிமாந்துறை என்ற முகவரியைச் சேர்ந்த திரு.மருதை என்பவர் மகன் மாசாணம்(வயது 37), திண்டுக்கல் நகரம், முத்தழகுபட்டி, எண்.29-பி, வடக்குத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த திரு.முருகேசன் என்பவர் மகன் சந்தோஷ்(வயது 20) ஆகியோர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பேரையும் தடுப்புக்காவலில் வைக்கக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, ஐ என்ற அய்யனார்(வயது 25), மாசாணம்(வயது 37), சந்தோஷ்(வயது 20) ஆகிய 3 பேரையும் தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, மேற்கண்ட 3 நபர்களும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.